நல்ல வாழ்வியலை நோக்கி நமது முதல் அடியை எடுத்து வைப்போம். வாழ்வோம் வாழ வைப்போம்
நன்றி
அய்யா தியானகுரு
உயிர்ப்பு தியான யோகா
இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கிறது. செசமோல் மற்றும் செசமின உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலங்கள் நல்லெண்ணெயில் நிறைந்திருக்கின்றன. நல்லெண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள், நரம்புகள் போன்றவற்றில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கிறது.
நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. நல்லெண்ணெயில் விட்டமின், ஈ, விட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
* நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
* நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.
0 Comments